ஒன்றின் விலை ரூபாய் 100ஆல் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த விலை குறைப்பு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.
அடுத்த வாரத்தில் இருந்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து மற்றும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீமெந்தின் விலையை குறைக்க அசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் 22ஆம் திகதி, 50 கிலோகிராம் சீமெந்தின் விலை 100 ரூபாயால் அதிகரிப்பட்டு ஆயிரத்து 95 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்நிலையில் 100 ரூபாய் குறைப்பின் காரணமாக மீண்டும் பழைய விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.