திகதி மீண்டும் பொதுத் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வாக்கெடுப்பு இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இஸ்ரேலிய நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்துக்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில், 94 பேர் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேலில் மீண்டும் பொதுத்தேர்தலை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மையினை பெற்றிருக்கவில்லை.
இதனையடுத்து கூட்டணி அரசாங்கம் அமைப்பதற்கான காலஎல்லை கடந்த நிலையில், ஆட்சி அமைக்க யாரும் முன்வராத நிலையே காணப்பட்டது.
இதனையடுத்தே நாடாளுமன்றத்தைக் கலைக்க இஸ்ரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, ஒரு வருட காலப்பகுதிக்குள் இடம்பெறவுள்ள மூன்றாவது பொதுத் தேர்தல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.