இலங்கையிடம் ஒப்படைப்பது தொடர்பாக சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய்ந்து வருவதாக நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட பிணை முறிகள் விற்பனையில் 10 பில்லியன் ரூபாய் மோசடி இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக வழக்கு தொடரப்பட்டதுடன், பிரதான சந்தேக நபராக அடையாளப்படுத்தப்பட்ட முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக கடந்த ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
முன்னதாக, இந்த ஆண்டு ஜூன் மாதம், மத்திய வங்கி கருவூல பத்திர மோசடி தொடர்பாக சட்டமா அதிபரால், அர்ஜுன மகேந்திரன் மற்றும் 9 பேருக்கு எதிராக நிரந்தர மேல் நீதிமன்ற விசாரணைக்கு முன் குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்தார்.
இதன்பின்னர் ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவரை ஜூலை 19 ம் திகதி நீதிமன்றில் ஆஜராக்கும் வகையில் பிடியாணையை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது