, பருத்தித்துறை பிரதான வீதியின் சிறுப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், அச்சுவேலி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய எம்.திலீபன் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற வேனும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விபத்தின் போது காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், விபத்துடன் தொடர்புடைய வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.