LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+28°C


















Sunday, December 15, 2019

ஒன்ராறியோவில் ஓபியாய்ட் தொடர்பான இறப்புகள் தொடர்ந்தும் அதிகரிப்பு!

ஒன்ராறியோவில் ஓபியாய்ட் தொடர்பான இறப்புகள் மற்றும்
அவசரகாலதுறை வருகை தருபவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்தும் அதிகரித்துவருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், அதாவது ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் 435 பேர் ஓபியாய்ட்டினால் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதார ஒன்ராறியோ தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டில் இதே காலப்பகுதியில் 307 உயிரிழப்புகள் சம்பவித்து இருந்ததாகவும், நடப்பு ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 40 சதவீதம் அதிகம் எனவும் கூறப்படுகின்றது.

ஏப்ரல் முதல் ஜூன் வரை ஓபியாய்ட் அளவுக் கதிகமாக எடுத்துக்கொண்ட 3,420 அவசரகால துறை வருகைகள் இருந்ததாகவும், இதேபோல 2018ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 50 சதவீதம் அதிகம் எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, லண்டன் பகுதியில் இந்த ஆண்டின் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 31 பேர் ஓபியாய்ட் தொடர்பான, அதிகப்படியான மருந்துகளால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7