முற்றாக ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
வெயாங்கொடவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பாதுகாப்பு செயலாளராக பணியாற்றும் பொழுது, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவின் முன்மாதிரியான நடவடிக்கைகளை கவனத்தில் கொண்டு செயற்படுவதாகவும் அவர் கூறினார்.
நாட்டு மக்களுக்கு பெரும் தலைஇடியாக அமைந்துள்ள பாதாள உலக கும்பல் மற்றும் போதைப் பொருளை இல்லாதொழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்