LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, December 7, 2019

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் போது இடர்முகாமைத்துவ நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அரச அதிபர் கோரிக்கை

கிளிநொச்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள
மக்களுக்கான உதவிகளை வழங்கும் போது மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவுடன் கலந்துரையாடி வழங்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்சியாக பெய்த கனகழை காரணமாக பல குடும்பங்கள் நான்கு பிரதேச செயலாளர் பிரிவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலினை தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அரச அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் காரணமாக இதுவரை 7,225 குடும்பங்களை சேர்ந்த 23,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 27 பாதுகாப்பு அமைவிடங்களில் 2,200 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து மாலையில் மழைவீழ்ச்சி பதிவாகும் சந்தர்ப்பத்தில் இடப்பெயர்வுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார். இரணைமடு குளமானது 36 அடி கொள்ளளவினை கொண்டது. ஆனால் தற்போது அந்த அளவினை அண்மித்துள்ளது.

இதனால் தற்போது திறந்து விடப்பட்டுள்ள 14 வான் கதவுகளும் தொடர்ந்தும் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் நீரின் வரவு அதிகரித்து காணப்படுகின்றது. வான் கதவுகளில் நீர் வெளியேறும் சந்தரப்பம் அதிகரிக்கப்படலாம். இதன் காரணமாக மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறான சந்தர்ப்பம் தொடர்பில் முன்னாயத்த நடவடக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தறப்பால், நிலவிரிப்புக்கள், குழந்தைகளுக்கான பால்மாக்கள், சுகாதார பொதிகள், பாய்கள், போர்வைகள், பொதிசெய்யப்பட்ட உணவுகள் போன்றவை மிக முக்கிய தேவையாக காணப்படுவதாகவும், அதனை அரச சார்பற்ற நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், ஏனையவர்கள் என அனைவரும் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளருடன் தொடர்பினை ஏற்பபடுத்தி வழங்க முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஏற்பாடுகள், மாற்று வீதி ஏற்பாடுகள், சுகாதார வசதிகள் போன்றவற்றுக்காக உரிய அதிகாரிகள் மற்றும் முப்படையினரின் உதவிகள் கிடைக்பெற்றுள்ளதாக தெரிவித்ததுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக பொலிசாரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் இன்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது உதவிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்திருந்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7