தெரிவிக்கப்படாதது அவர்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகமென தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்?’ என்ற தலைப்பில் சமூக வலைதளப் பக்கங்களில் காணொளி ஒன்றினைப் பதிவிட்டுள்ள ஸ்டாலின் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “குடியுரிமை திருத்தச் சட்டம் என்கிற புதியச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறது.
இது அரசியல் சாசனத்திற்கு எதிரான, மக்கள் விரோத, மக்களைப் பேதப்படுத்தி – பிளவுபடுத்தும் பிற்போக்கான சட்டம் என்பதால் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் தி.மு.க. எதிர்த்து வாக்களித்தது. ஆனால், அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்து வாக்களித்தது. அதனைச் சட்டமாக்க மத்திய பா.ஜ.க. அரசுக்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.
இந்த சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் போராட்டங்கள் மக்கள் இயக்கமாகவே நடந்துகொண்டு இருக்கிறது. தி.மு.க.வும் தமிழ்நாட்டில் போராட்டங்களை முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறது.
அகதிகளாக வரும் எல்லோருக்குமே குடியுரிமை வழங்கப்படும் என்று சொல்லி இருந்தால் நாம் எதிர்க்கப் போவதில்லை. சிறுபான்மையினரான இஸ்லாமிய மக்களை மட்டும் புறக்கணிக்கின்ற வகையில், ஓரவஞ்சனையான, மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்துகிற சட்டமாக அதை பா.ஜ.க. மாற்றியுள்ளது. அதற்கு அ.தி.மு.க. பக்கபலமாக இருக்கிறது. அதனால்தான் எதிர்க்கிறோம்.
மேலும் ஈழத் தமிழர்களுக்கு பா.ஜ.க., அ.தி.மு.க. இழைக்கின்ற மாபெரும் துரோகம் இதுவாகும். அதனால்தான் தமிழர்கள் அனைவரும் இந்தச் சட்டத்தை கண்டிப்பாக எதிர்த்தாக வேண்டும் என்று சொல்கிறோம்.
ஈழத் தமிழர்கள் நம்முடைய தொப்புள்கொடி உறவுகள். அவர்கள் இலங்கையில் வாழ முடியாமல், தமிழகத்தில் வந்து முகாம்களிலும், வெளியிலும் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களது அடிப்படை உரிமைகள் குறித்தோ, மனிதர்களுக்குரிய கண்ணியத்தோடு வாழ்வதற்கு அவர்களை அனுமதிக்க வேண்டும் என்பது குறித்தோ மத்திய அரசுக்கு கவலை இல்லை.
அதுமட்டுமல்லாது தமிழர்கள் என்றாலே மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தான் செயற்படுகிறது. இதனை அ.தி.மு.க. தட்டிக் கேட்க முடியாமல் முதுகெலும்பு இல்லாமல் நிற்கிறது. இதுதான் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று” என குறிப்பிட்டுள்ளார்.