கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் ஆகியவற்றுடன் இணைந்து ஓட்டமாவடி பிரதேச செயலகம் நடாத்திய பிரதேச கலாசார இலக்கிய விழாவும் மருதோன்றி 08வது மலர் வெளியீட்டு விழாவும் இன்று வியாழக்கிழமை இடம் பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் தலைமையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எஸ்.நவநிதன் கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் கலந்து கொண்டதுடன் விருந்தினர்களாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ரி.எம்.றிஸ்வி, பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அப்ஹர், ஓட்டமாவடி கோட்ட கல்வி பணிப்பாளர் எம்.ஐ.அஹ்சாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதோடு கலாசார நிகழ்வை முன்னிட்டு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் மருதோன்றி 08வது மலர் வெளியீட்டு வைக்கப்பட்டது.
மருதோன்றி 08வது மலர் வெளியீட்டு உரையினை ஓட்டமாவடி கலாசார உத்தியோகத்தர் எச்.எம்.எம்.நியாஸ் நடாத்தியதுடன் ஆய்வு உரையினை எழுத்தாளர் ஓட்டமாவடி அறபாத் நடாத்தி வைத்தார்.
கல்குடா மீடியா போரத்தினால் அதிதிகள் அனைவருக்கும் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் வரவேற்பின் போது கிராமிய முறைப்படி பொல்டித்தும் பெண்களினால் குரைவை வைத்தும் வரவேற்கப்பட்டனர்.