உருவாக்கியுள்ள நாட்டின் பெயரை ‘ஸ்ரீகைலாசா’ என மாற்றியுள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை நேரலையில் சத்சங்கம் மூலம் சீடர்களைத் தொடர்பு கொண்ட நித்யானாந்தா இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கைலாசா என்ற இணையத் தளத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 8 இலட்சம் பேர் என்ற நிலையில் அதன் சேர்வர் தடைப்பட்டதாகவும் இதனால் வேறு சேர்வர் மாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது வரை கைலாசா நாட்டின் குடியுரிமையைப் பெறுவதற்கு 12 இலட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கார்த்திகை நாளான நாளைய தினம் இது தொடர்பாக தான் முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.
கைலாசா நாடு அமைப்பதற்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்று தானே எதிர்பார்த்திருக்கவில்லை எனக் கூறியுள்ள நித்தியானந்தா, கைலாசா என்ற நாட்டை அமைப்பதையும் அதில் இந்துக்கள் வாழ்வதையும் சில நாடுகள் வரவேற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பல நாடுகளில் உள்ள தூதரகங்களின் மூலம் நித்யானந்தா தேடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அவர் எங்கிருக்கிறார் என்று இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.