கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் R.M.M. ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது எந்தவொரு சர்வதேச தனியார் பாடசாலையும் கல்வி அமைச்சின் கீழ் இல்லை எனவும், இதனால் சர்வதேச தனியார் பாடசாலைகளில் கற்பிக்கப்படும் முறைமைகள், மாணவர்களுக்கான ஒழுக்க விதிமுறைகள் தொடர்பாக கண்காணிப்பதற்கான சந்தர்ப்பம் இல்லாது போயுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சில சர்வதேச தனியார் பாடசாலைகளில் ஆசிரியர் நியமனங்களில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.