வேயில் இடம்பெற்ற விபத்தில், பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹாமில்டனில் டொர்வால் வீதி- நெடுஞ்சாலைப் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 10 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்து விட்டதாக மருத்துவபிரிவினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் 20 வயது மதிக்கதக்கவர் என தகவல் வெளியிட்டுள்ள பொலிஸார், இதுகுறித்த மேலதிக தகவல் எதனையும் வெளியிடவில்லை.
விபத்தை ஏற்படுத்திய ட்ரக் சாரதி சம்பவ இடத்திலேயே தரித்து நின்றதாகவும், இதுகுறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.