அந்நாட்டிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கமைய அந்த நாட்டின் 12 மகாணங்களில் இணையவழி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, அதில் செயற்கை நுண்ணறிவு முறையில் உருவாக்கப்பட்ட நீதிபதிகள் மூலம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளன.
இணையதளம் மற்றும் நவீன தகவல் தொழிநுட்பங்களை நீதித் துறையில் பயன்படுத்துவதை சீன அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகின்ற நிலையில், இதனை அந்நாட்டு மக்களும் வரவேற்றுள்ளனர்.
சீனாவில் மிகவும் பிரபலமான ‘வீ-சாட்’ சமூக வலைதளம் மூலம் இணையவழி நீதிமன்றங்களை அதிகாரிகள் அமைத்துள்ளன.
சுமார் 12 மாகாணங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அத்தகைய நீதிமன்றங்களில் பொதுமக்கள் ‘வீ-சாட்’ மூலம் வழக்குத் தொடர முடியும். அந்த வழக்குகளை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நீதிபதி விசாரிப்பார். அந்த நீதிபதிக்கான உருவமும் கொடுக்கப்பட்டிருக்கும்.
வாதிகளிடமும், பிரதிவாதிகளிடமும் அவர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி விசாரணை நடத்துவார். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் அளிக்கும் பதில்களின் அடிப்படையில் தீர்ப்புகளையும் வழங்குவார்.
‘வீ-சாட்’ இணையவழி நீதிமன்றங்களைப் பொருத்தவரை, இதுவரை 1,18,764 வழக்குகள் அந்த நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டதாகவும், அவற்றில் 88,401 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன