‘தீர்ப்புகள் விற்கப்படும் படத்தில் நடிகர் சத்யராஜ் நடிப்பில் இதன் டீசர் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், படம் பற்றி இயக்குநர் தீரன் கூறுகையில்,”சமுதாயத்தின் மீது ஒரு தனிமனிதனுக்கு இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்திய ‘வெட்னஸ்டே பட பாணியில் உருவாகும் திரைப்படமே இதுவாகும்.
படத்தின் தலைப்பு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், அது கதைக்கு மிகவும் அவசியமாக இருந்தது. கோடைவிடுமுறையில் படத்தை வெளியிடவுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.
இந்தப் படத்திற்கு பிரசாத் இசையமைப்பில் படத்தை ஹனிபீ கிரியேஷன்ஸ் சார்பில் சாஜீவ் மீரா சாஹிப் ராவுத்தர் தயாரித்துள்ளார். v