பிரதேசத்தில் அதி உயர் கம்பி வலையமைப்பினால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு வேலிகள் பொருத்தப்பட்டுள்ளன.
குறித்த பாதையின் இருமருங்கிலும் அபாயகரமான மண்சரிவு உள்ள அதேநேரம் பாரிய மரங்கள் விழக்கூடிய நிலையில் காணப்படுகின்றது.
இதிலிருந்து இந்த பாதையின் ஊடாக பயணிக்கும் பயணிகளுக்கும் வாகனங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த பாதுகாப்பு வேலிகள் பொருத்தப்பட்டுள்ளன.
நெடுஞ்சாலை அமைச்சின் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிலச்சரிவு பேரழிவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் jica நிதி உதவியுடன் வீதி பேரழிவு முகாமைத்துவத்திற்கான செயற்பாடு ஊடாக இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த பிரதேசத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் இவை பொருத்தப்பட்டமை பாதுகாப்பாக அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இருந்த போதிலும் குறித்த பகுதியில் பயணிக்கும் வாகனங்களை கவனமாக பயனிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.