நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட சாரண சங்கத்தினரால் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி இன்று(வெள்ளிக்கிழமை) சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் சாரண சங்கத்தின் மாவட்ட சாரண ஆணையாளர் வி.பிரதீபன் தலைமையில் சிரமதான நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
டெங்கு நுளம்புப் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்தவும், சூழலை சுத்தமாக வைத்திருக்கும் நோக்கோடும் மேற்படி சிரமதானப் பணியினை வின்சன் மகளிர் தேசிய பாடசாலை, புனித மிக்கல் கல்லூரி மற்றும் சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை ஆகிய மூன்று தேசிய பாடசாலைகளின் சாரண மாணவர்களால் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மேற்படி சிரமதானப் பணிகளை மாநகர முதல்வர் தி.சரவணபவன் நேரில் சென்றுது பார்வையிட்டதுடன், சாரண மாணவர்களின் சேவையினைப் பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்தியதுடன், கழிவகற்றலுக்கான ஓழுங்குகளையும் மேற்கொண்டிருந்தார்.
சிரமதானப் பணியில் சிசிலிய பெண்கள் பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி உதயகுமார் தயாளினி, ஆசிரியர் திருமதி டெனிஷ்டா சசிதரன் மற்றும் கல்வி சாரா ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.