(ஜெ.ஜெய்ஷிகன்)
கிழக்கு மாகாண சமூகசேவைத் திணைக்களம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தினம் கடந்த 17.12.2019ஆம் திகதி செங்கலடி சௌபாக்கியா மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் சாரங்கபாணி அருள்மொழி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரச அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து சிறப்பித்தார். சிறப்பு அதிதிகளாக ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் வில்வரெத்தினம், கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களப் பணிப்பாளர் என்.மதிவண்ணன், கௌரவ அதிதியாக வை.எம்.சீ.ஏ நிறுவனத்தின் பொதுச் செயலாளர் ஜெகன் ஜீவராஜ், முதன்மை அதிதியாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தின் தலைவர் டி.அரிதாஸ் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
'மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு மற்றும் அவர்களின் தலைமைத்துவத்தை ஊக்குவித்தல்' என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற விசேட திறனாளிகள் தினத்தில் பரா ஒலிம்பிக் போட்டி நிகழ்வில் பதக்கம் வென்றவர்கள் , இவ்வாண்டுக்கான சிறந்த மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்கள் மற்றும் இல்லங்கள், பிரதேச ரீதியாக தெரிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் அதிதிகளால் பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டiயும் படங்களில் காண்க.