புதுவையில் வரண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகம் மற்றும் புதுவையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் வரண்ட வானிலை நிலவும்.
ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியசும் நிலவக்கூடம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி தமிழகம் மற்றும் புதுவையின் எந்த பகுதிகளிலும் மழை பதிவாகவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.