சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடிக்கு வெளியே வன்முறையில் ஈடுபட்ட குழுவினர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோம் மேற்கொண்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், கும்லா மாவட்டம் சிசாய் தொகுதியில் உள்ள 36-வது வாக்குச்சாவடிக்கு அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிரடிப்படை பொலிஸாரின் ஆயுதங்களை பறிக்க ஒரு கும்பல் முயற்சி செய்துள்ளது.
இதனையடுத்து பொலிஸார் குறித்த குழுவினர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திடுயுள்ளதுடன், இதில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகம் என்பதால் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.