குறித்து ஐ.நா.வின் மனித உரிமைக் குழுவும் அமெரிக்காவும் கவலை வெளியிட்டுள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் அடிப்படையே பாரபட்சமானது எனவும் அந்தச் சட்டம் இயற்றப்பட்டமை கவலையளிக்கும் விதமாக இருக்கிறது என கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமைப்பின் தூதர் ஷாம் பிரவுன்பேக் தனது ருவிற்றர் பதிவில், “இந்தியாவின் மிகப்பெரிய பலம் அதன் அரசியலமைப்புச் சட்டமாகும். மற்றொரு ஜனநாயக நாடான அமெரிக்கா, இந்தியாவின் ஜனநாயக விடயங்களை, மரபுகளை மதிக்கிறது.
ஆனால், சமீபத்தில் இந்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமைச் சட்டத்தினால் உருவாகும் தாக்கங்கள் எங்களுக்குக் கவலையளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பு குடியுரிமைச் சட்டம் குறித்து தனது ருவிற்றர் பக்கத்தில் வெளியிட்ட கருத்தில் “இந்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய குடியுரிமைச் சட்டம் அடிப்படை இயல்பிலேயே பாரபட்சமாக இருப்பதை நினைத்து நாங்கள் கவலை கொள்கிறோம்.
இந்த குடியுரிமைச் சட்டம் சர்வதேச மனித உரிமை உடன்படிக்கைகளுக்கு இணங்கும் வகையில் இருக்கிறதா என்பதை உச்ச நீதிமன்றம் கவனமாகப் பரிசீலிக்கும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி வொஷிங்ரன் நகரில் 2+2 என்ற பெயரில் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கும் நிலையில் அமெரிக்கா இந்த கருத்தைத் தெரிவித்துள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு மக்களவையிலும், மாநிலங்களவையும் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பா.ஜ.க. அரசு நிறைவேற்றியது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த சட்டத்துக்கு எதிராக கடந்த சில நாட்களாக அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் கடுமையாகப் போராடி வன்முறையில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.