புதிய திகதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஊரக உள்ளுராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக வரும் 27 மற்றும் 30 ஆம் திகதிகளில் நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
தொகுதி மறுவரையறை பணிகளை முழுமையாக முடிக்காமலேயே தேர்தல் அறிவிப்பாணை வெளியாகியுள்ளதால்இஅதற்கு தடைவிதிக்க வேண்டும் எனக் கூறி திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும்இ புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை பணிகளை செய்துவிட்டு 4 மாதங்களில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.