(ஜெ.ஜெய்ஷிகன்)
வாழைச்சேனை இந்து தேசிய பாடசாலையில் கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு தேசிய பாடசாலையில் முதல்வர் அ.ஜெயஐPவன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வாழைச்சேனை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி போல்ராஜ் மதன், சிறப்பு அதிதிகளாக கல்குடா வலயத்தின் கோறளைப்பற்று வாழைச்சேனை கோட்ட, கோட்டக்கல்வி அதிகாரி நாகலிங்கம் குணலிங்கம், ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் யோகராஜா, கல்லூரியின் முன்னைநாள் அதிபர் எஸ். சின்னத்தம்பி முறைசாராக் கல்விக்கு பொறுப்பான உதவிக்கல்விப் பணிப்பாளர் செல்வி.யோகேஸ்வரி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் நிதிராஜ் மற்றும் கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குக் குழுவின் உப செயலாளர் க.மங்களன், பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் '2001 வட்டம்' பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளால் கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 49 மாணவர்களுக்கான புத்தகப் பைகள் மற்றும் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 194 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்றிருந்தனர். குறித்த மாணவர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்ட்டது. கற்பித்த ஆசிரியர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.
பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குக் குழு, பழைய மாணவர் சங்கம், மற்றும் '2001 வட்டம்' என்பன இணைந்து இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத் தக்கது.