மீண்டும் சரிவை சந்தித்துள்ளதாக, சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீன வர்த்தக அமைச்சகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த நவம்பர். மாதத்தில் அமெரிக்காவுக்கான சீனாவின் ஏற்றுமதி 23 சதவீதம் சரிவடைந்து 3,560 கோடி டொலர்களாக இருந்தது. மேலும், அந்தமாதத்தில், அமெரிக்காவிலிருந்து சீனா மேற்கொண்ட இறக்குமதி 2.8 சதவீதம் குறைந்து 1,100 கோடி டொலர்களாகக் காணப்பட்டது. இதன் மூலம், அமெரிக்காவுடான வர்த்தகத்தில் சீனாவுக்கு 2,460 கோடி டொலர்கள் அளவுக்கு வர்த்தக உபரி கிடைத்துள்ளது.
அமெரிக்காவுடான வர்த்தக இழப்பை ஈடு செய்யும் விதமாக பிரான்ஸ் உள்ளிட்ட இதர நாடுகளுக்கான ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது சீனாவுக்கு பெரும் உதவியாக அமைந்தது.
சர்வதேச அளவில் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான தேவையில் மந்தநிலை காணப்படுகிற போதிலும் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் உலக ஏற்றுமதியில் சீனாவின் பங்களிப்பு 1.1 சதவீதம் அளவுக்கு மட்டுமே குறைந்து 22,170 கோடி டொலர்களாக உள்ளது. இறக்குமதி 0.3 சதவீதம் உயர்ந்து 18,300 கோடி டொலர்களானது. இதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தின் மூலம் சீனாவுக்கு 3,870 கோடி டொலர்கள் வர்த்தக உபரி கிடைத்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த வர்த்தக சரிவானது இரு நாடுகளுக்கும் இடையில் மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில், அமெரிக்கா உடன் சுமூகமாக வர்த்தகம் புரியும் நோக்கில் அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோயாபீன், பன்றி இறைச்சி உள்ளிட்ட சில உணவுப் பொருட்களுக்கு வரி வீதம் குறைக்கப்படும் என சீன அரசு அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒக்டோபரில் நடைபெற்ற இருரதப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு முதல் கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அமெரிக்கா ஜனாதிபதி அறிவித்த போதும், இதுவரை இவ் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கான அறிகுறிகள் இல்லை.