ஆதரங்களை ரொறன்ரோ பொலிஸார் தீவிரமாக திரட்டி வருகின்றனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள பொலிஸார், இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை இரவு 7.45 மணியளவில், ஸ்கார்பாரோ கோல்ஃப் கிளப் வீதி மற்றும் நெவார்க் வீதி, எல்லெஸ்மியர் வீதியின் தெற்கே காரொன்று மோதப்பட்டிருந்த நிலையில். அதிலிருந்து 30வயது மதிக்க ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவர் அதிர்ச்சி மையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டார். எனினும் அவரது தற்போதைய நிலை வெளியிடப்படவில்லை.
தற்போது இதுகுறித்த தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார், சாட்சிகளையும் பாதுகாப்பு கெமரா காணொளியையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.