தண்டனை விதித்துள்ளது.
720 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய இரு வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட குறித்த பிரஜைக்கே இன்று (புதன்கிழமை) நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் குறித்த 45 வயதான நபர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே மேற்படி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இவர் 2017ஆம் ஆண்டு ஒக்ரோபர் 27ஆம் திகதி, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது மேற்படி ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.