குற்றவழக்குகளின் கீழ் தேடப்பட்டு வரும் சாமியார் நித்தியானந்தா அவ்வவ்போது காணொளிகளை வெளியிட்டு சர்சை ஏற்படுத்தி வருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் வெளியிட்டுள்ள காணொளியொன்றில், என்னை யாராலும் தொட முடியாது, எந்த சட்டமும் ஒன்றும் செய்யாது என குறிப்பிட்டுள்ளார்.
நான் உங்களிடம் உண்மை சொல்கிறேன் எனத் தெரிவித்த அவர், நாதான் பரமசிவன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சீடர்கள் என்னிடம் இருப்பதால் நீங்கள் உங்களுடைய நேர்மை, விசுவாசத்தை என்னிடம் காண்பித்தீர்கள், உங்களுக்கு மரணமே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையைச் சொந்த ஊராக கொண்ட நித்யானந்தா பெங்களூர் பிடதியில் மடத்தை ஆரம்பித்து நடத்தி வந்த நிலையில் பாலியல் வழக்கு உள்ளிட்ட வழக்குளின் கீழ் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.