பல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக தூத்துக்குடி, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அளித்து ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதேவேளை, கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், குற்றாலம் மெயின் அருவி, பழைய அருவி, ஐந்தருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
சேலத்தில் கோரிமேடு, கன்னங்குறிச்சி, ஏற்காடு பகுதிகளிலும் புதுக்கோட்டையில் ஆலங்குடி, கறம்பக்குடி, மணல்மேடு, அவுடையார், அரசர்குளம் பகுதிகளிலும் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதேபோல திருவண்ணாமலையில் போளூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர், களக்காடு, பணகுடி, காவல்கிணறு, திசையன்விலை, ராதாபுரம் பகுதிகளிலும் நெல்லை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கடும் மழை பெய்து வருகிறது.
ராமநாதபுரத்தில் அதிகபட்சமாக 9 செ.மீ. ராமேஸ்வரத்தில் 8 செ.மீ. தேவிப்பட்டினத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.