வாக்களிக்கவுள்ளதாக சிவசேனா தெரிவித்துள்ளது.
தங்களது சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்கள் கிடைக்கவில்லை என்றால் இவ்வாறு குறித்த திருத்த மசோதாவிற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக மாநிலங்களவை எம்பியும் மூத்த தலைவருமான சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக மக்களவையில் சிவசேனா வாக்களித்தது.
மகாராஷ்டிராவில் அதன் உடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் எதிர்த்து வாக்களித்த நிலையில், சிவசேனா ஆதரித்தது.
இதனையடுத்து, திடீரென தங்களுக்கு மசோதாவில் சில சந்தேகங்கள் இருப்பதாகவும், அதனை நிவர்த்தி செய்தால் மட்டுமே மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஆதரவு அளிக்கப்படும் எனவும் சிவசேனா தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த மசோதாவில் இலங்கையில் உள்ள தமிழ் இந்துக்களுக்கு சாதகமாக எதுவும் இல்லை எனவும் மாநிலங்களவை எம்பியும் மூத்த தலைவருமான சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார்.