கன மழை காரணமாக ஏற்படும் வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்காக குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெரிய குளங்களான உன்னிச்சை, நவகிரி, உறுகாமம், கட்டுமுறிவு, வெலிக்காக்கண்டி ஆகிய குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளனவென மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.எம்.பி.எம். அஸ்ஹர் தெரிவித்தார்.
அதேவேளை மட்டக்களப்பை ஊடறுத்துச் செல்லும் புளுகுணாவை குளத்தின் வான் கதவும் திறந்து விடப்பட்டுள்ளது.
புளுகுணாவைக் குளத்தின் நீர்மட்டம் 29அடிக்கு மேல் உள்ளதாலும், தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டிருப்பதாலும் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, கடற்படையினர், விமானப் படையினர், இராணுவத்தினர், விஷேட அதிரடிப்படையினர், பொலிஸார் ஆகியோர் கண்காணிப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனரென அதிகாரிகள் தெரிவித்தனர்.