ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் அடிப்படை எதிர்ப்பு மனு இன்று (செவ்வாய்க்கிழமை) உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மனு தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தனது கட்சிக்காரர் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரோமேஷ் டி சில்வா அறிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தலைமை நீதியரசர் பிரியந்த ஜயரத்ன தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழு அறிவித்தது.
இருப்பினும் கடந்த 22 ஆம் திகதி மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம், குறித்த வழக்கின் குற்றச்சாட்டில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விடுவித்து உத்த்ராவிட்டிருந்தது.
நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்ட நிலையில் அரசியலமைப்பின் 35 (1) வது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு எதிரான வழக்கை நீதிமன்றத்தால் நடத்த முடியாது என்பதனால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.
33.9 மில்லின் ரூபாய் பொது மக்கள் நிதியை மோசடியாகப் பயன்படுத்தி மெதமுலனவில் டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத்தூபி மற்றும் நூதனசாலை ஆகியவற்றை அமைத்தமை தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட ஏழு பேருக்கு எதிராக, மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.