அதிகாரம் இல்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மகாவம்சம் போன்ற வரலாற்று நூல்கள் பாலி மொழியில் எழுதப்பட்ட புனைக் கதைகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாராந்தம் ஊடகவியலாளர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இலங்கை பௌத்த நாடு என அர்த்தப்படுத்துவது முற்றிலும் தவறான விடயம். பாலி மொழி மூலம் புனைக்கதைகளை உருவாக்கி பௌத்த தேரர்களால் சிங்கள சமூகத்திற்கு தவறான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிங்கள வரலாறுகள் முதல் பௌத்த தேரர்கள் வரை, வரலாறு என போலியான புனைக்கதைகளை கட்டியெழுப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் எந்தவொரு சிங்கள பௌத்தரும் வசிக்கவில்லை.
இலங்கை எந்தவொரு விதத்திலும் சிங்களவர்களின் பூர்விகம் அல்ல. இலங்கையின் பூர்வீக மக்கள் தமிழர்களே என்ற காரணத்தினால் இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்து வந்துள்ளனர்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.