சைகையை காட்டி அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவின் அபராதத் தொகையை அரசாங்கம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் அபராதத்தை அரசாங்கம் செலுத்தத் தவறினால், மக்களிடம் ரூபாய் விகிதம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதேவேளை எதிர்வரும் தேர்தலில் புலம்பெயர் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறான நடவடிக்கையை எடுப்பது கண்டிக்கத்தக்கது என்றும் உதய கம்மன்பில கூறினார்.
பிரித்தானியத் தலைநகர் லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து ‘கழுத்தை அறுக்கும்’ சைகையை காண்பித்து அச்சுறுத்தியதற்காக அவருக்கு 2500 பவுண்ட்ஸ் அபராதம் விதித்து வெஸ்ட்மின்ஸ்ரர் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.