பாலியல் வன்கொடுமை வழக்கை திரும்பப் பெற மறுத்த பெண் மீது அசிட் வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் பெண்களின் பாதுகாப்பு குறித்து பலரும் கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
ஹைதராபாத் மற்றும் உன்னாவ் சம்பவங்கள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்நிலையில், பாலியல் வழக்கை திரும்பப் பெற மறுத்த பெண் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது.