நிறைவேற்றப்பட்டாலும் நீதிமன்றத்தின் சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் என மூத்த காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் கூறினார்.
குடியுரிமைத் திருத்த சட்டமூலம் மக்களவையில் ஏறக்குறைய 9 மணிநேரம் விவாதத்துக்குப்பின் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலதிற்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இந்நிலையில் குடியுரிமை சட்டமூலம் இன்று (புதன்கிழமை) மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விவாத்தின்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்துத்துவா செயல் திட்டத்துடன் இந்த குடியுரிமை சட்டமூலத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது.
இது மிக மோசமான நாள். இதனை ஏற்க முடியாது. கட்டாயமாக இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டாலும் நீதியின் முன்பு இரத்து செய்யப்படும்” எனக் கூறினார்.
Good question by Chidambaram but there is no answer from home minister pic.twitter.com/DqCMNkgbub— T R 😎😎😎 (@thaufikrahman19) December 11, 2019