மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு கத்தோலிக்க திருச்சபைகள் கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு மாவட்ட பேராயர், கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக நாட்டில் கத்தோலிக்கர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் பாதுகாப்பு குறித்து தங்களுக்கு பல அறிக்கைகள் கிடைத்தமையை சுட்டிக்காட்டிய அவர் இதன் காரணமாகவே பாதுகாப்பை பலப்படுத்துமாறு அரசாங்கத்தை கோருவதாக தெரிவித்தார்.
பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்கள் மீது மற்றொரு தாக்குதலுக்கான சந்தர்ப்பம் இருக்கக்கூடும் என்ற அனுமானத்திலேயே பாதுகாப்பு வழங்குமாறு அரசாங்கத்திடமும் பாதுகாப்பு துறையிடமும் இந்த கோரிக்கையை முன்வைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.