கொலை செய்யபட்ட உன்னாவ் பெண் விவகாரத்தில் ஏழு பொலிஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண் வழங்கிய முறைப்பாட்டை ஏற்காததன் காரணமாக குறித்த ஏழு பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் பிணையில் வெளியே வந்த பின்னர் குறித்த பெண்ணை எரித்து கொலை செய்தனர்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், உயிரிழந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குறித்த அதிகாரிகள் எழுவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.