டிசம்பர் 9 ஆம் திகதி வரை நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக குற்றவியல் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து கொழும்பு தலைமை நீதவான் லங்கா ஜெயரத்ன பயணத்தடை விதித்து உத்தரவிட்டார்.
கடந்த திங்கட்கிழமை நடந்ததாகக் கூறப்படும் இந்தக் கடத்தல் தொடர்பாக சுவிஸ் தூதரக ஊழியர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சி.ஐ.டி. இந்தச் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தூதரக ஊழியரிடமிருந்து ஒரு வாக்குமூலத்தை பதிவுசெய்ய வேண்டியிருப்பதால் பயணத்தடையை விதிக்குமாறு சி.ஐ.டி அலுவலகம் கோரிக்கை விடுத்திருந்தது.
சுவிஸ் தூதரகம் மற்றும் சுவிஸ் மத்திய வெளியுறவு அமைச்சு ஆகியவை அந்த ஊழியரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி சாட்சியங்களை வழங்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.