புகுந்து அடாவடியில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பல், பொலிஸாரைக் கண்டதும் மோட்டார் சைக்கிள் ஒன்றைக் கைவிட்டுத் தப்பி ஓடியுள்ளது.
இந்தச் சம்பவம் மானிப்பாய்- சுதுமலை வடக்கில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து, வன்முறையில் ஈடுபட்டதுடன் வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்து சேதமாக்கியுள்ளார்கள்.
அவர்கள் கைகளில் வாள் உள்ளிட்ட இரும்பினாலான ஆயுதங்கள் இருந்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களை அடித்து சேதப்படுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்ட கும்பல், வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்திவிட்டுத் தப்பித்தது செல்ல முற்பட்டனர்.
அவ்வேளை அந்த வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் மானிப்பாய் பொலிஸார் இருவரைக் கண்டதும் வன்முறையாளர்கள் தமது மோட்டார் சைக்கிள் ஒன்றை வீதியில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
வன்முறைக் கும்பலின் மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் மீட்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறித்த மோட்டார் சைக்கிளின் இலக்க தகடுகள் மறைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.