தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்திற்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்களும் சினிமா நட்சத்திரங்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவரது இரசிகர்களும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர் ரஜினிகாந்திற்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சச்சின் தனது டுவிற்றர் பக்கத்தில், “பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரஜினி சார், திரையில் உங்களது ஸ்ரைலும், நிஜ வாழ்வில் உங்களது பணிவும் உங்களை எல்லா தர்பாரிலும் தலைவர் ஆக்குகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் @rajinikanth Sir.— Sachin Tendulkar (@sachin_rt) December 12, 2019
Your onscreen style and offscreen humility make you the ‘Thalaiva’ in every ‘Darbar’. pic.twitter.com/cIYZLJcjk9