மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மாரின் தலைவர் ஆங் சாங் சூகி ஆஜராகியுள்ளார்.
மியான்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் தமது நிலையை விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2017ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் ரோஹிங்கியா விடுதலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதிகள் ரகைனில் பொலிஸ் நிலையத்தைத் தாக்கியதில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை உயிரிழந்தார்.
இதற்குப் பதிலடியாக மியான்மார் இராணுவம் எடுத்த நடவடிக்கை காரணமாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடான பங்களாதேஷிற்கு தப்பிச் சென்றனர்.
இந்நிலையில், ஐ.நா.வின் உண்மையைக் கண்டறியும் அறிக்கையில், ரோஹிங்கியா மக்களுக்கு கிடைக்கவிருந்த உதவியையும் இராணுவம் தடுத்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மியான்மார் மறுத்திருந்தது.
பௌத்த மதத்தை அதிகம் பின்பற்றும் நாடான மியான்மார், ரோஹிங்கியா மக்கள் மீது தொடுக்கப்பட்ட நடவடிக்கையை பயங்கரவாதத்தை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை எனக் கூறியது.
எனினும், ரோஹிங்கியா மக்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து மியான்மார் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என 2018ஆம் ஆண்டில் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்தது.
ஆனால் சர்வதேச நீதிமன்றத்தை உருவாக்குவதற்காக இயற்றப்பட்ட சட்டத்தில் மியான்மார் கையெழுத்திடவில்லை என்பதால் விசாரணைக்கு அந்நாடு ஒத்துழைக்கவில்லை.
இருப்பினும் 1948ஆம் ஆண்டு இனப்படுகொலைக்கு எதிரான ஒப்பந்தத்தில் காம்பியாவும், மியான்மாரும் அங்கமாக இருப்பதால் சர்வதேச நீதிமன்றத்தில் முதன்முறையாக ரோஹிங்கியா மக்கள் மீதான வன்முறை குறித்து மியான்மார் மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ரோஹிங்கியா மக்களைக் குறிவைத்து நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக காம்பியா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கில் மியான்மார் சார்பாக தாமே ஆஜராக இருப்பதாக மியான்மார் தலைவர் ஆங் சான் சூகி தெரிவித்திருந்தார். நாட்டின் நலனுக்காக ஆங் சாங் சூகி தலைமையிலான வழக்கறிஞர் குழு சர்வதேச நீதிமன்றத்தில் சூகியின் அலுவலகம் நவம்பர் 20ஆம் திகதி தெரிவித்தது.
இந்த சூழலில் மியான்மார் அரசாங்கமும் இராணுவமும் இணைந்து இந்த வழக்கைச் சந்திக்கத் தயாராகி வருகின்றன. சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மாரின் பிரதிநிதியாக ஆங் சான் சூகி ஆஜாராவது முக்கிய விடயமாகப் பார்க்கப்படுகிறது.
என்றாலும், இன்று நடைபெறும் விசாரணை முதல் கட்டம்தான் என்ற நிலையில் சர்வதேச நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை முடிவதற்கு 10 ஆண்டுகள் ஆகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.