LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, December 10, 2019

போலியாக தொண்டைப் புற்றுநோய் எனத் தெரிவித்து பணம் சேகரிக்கும் கிளிநொச்சி பெண்

கிளிநொச்சி- விவேகானந்த நகரைச் சேர்ந்த
பெண் ஒருவர், தனக்கு தொண்டைப் புற்றுநோய் எனக்கூறி போலி ஆவணங்களை காண்பித்து பணம் சேகரிக்கும் நடிவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளாரென யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் தெல்லிப்பளை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாகவும் இதற்கு சத்திர சிகிசை மேற்கொள்வதற்கு இரண்டு மில்லியன் ரூபாய் பணம் தேவையென குறித்த பெண் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் செய்திகளை வெளியிட்டு பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் கடந்த சில மாதங்களாக ஈடுப்பட்டு வருவதாகவும், தனக்கு தொண்டைப் புற்றுநோய் எனக் தெரிவித்து அவர் காண்பிக்கும் ஆவணங்கள் போலியானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “கடந்த 17-09-2019 அன்று கருப்பை கழுத்து புற்றுநோய் காரணமாக மரணமடைந்த கிளிநொச்சி தொண்டமான் நகரைச் சேர்ந்த மதியாபரனம் லதா (வயது 46) என்வருடைய மருத்துவ அறிக்கையினை  பிரதி எடுத்து அதில் தன்னுடைய பெயரையும் வயதினையும் மாத்திரம் மாற்றம் செய்து, இவ்வாறு பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் யாழ்.போதனா வைத்தியசாலையில் தனக்கு தொண்டையில் ஏதோ இருக்கிறது. சாப்பிடும்போது கஷ்டமாக இருக்கின்றது என கூறி பரிசோதனை செய்துள்ளார். அவருக்கு ENT பரிசோதனை செய்தபோது எவ்விதமான பிரச்சினையும் இல்லை என மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்தோடு இவர் எக்காலத்திலும் தெல்லிப்பளை வைத்தியசாலைக்குச் சென்று எந்த சிகிசையும் பெற்றுக்கொள்ளவில்லை என்பது அங்குள்ள பதிவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பெண் இணையத்தளங்களுக்கும், சமூக வலைத்தளங்களுக்கும் அனுப்பியுள்ள மருத்துவ அறிக்கைகளில் ஒன்று இந்தியாவிலுள்ள தனியார் வைத்தியசாலையில் பெறப்பட்ட ஒரு வயது பிள்ளை ஒன்றின் மருத்துவ அறிக்கையாகும்.

மேலும் திருமணம் செய்யவில்லை எனத் தெரிவிக்கும் அவர் லதாவின் கிளினிக் கொப்பிகளிலுள்ள  திருமதி என்பதனையும் மாற்றம் செய்யாது விட்டிருக்கின்றார். மேலும் இவருக்கு வயது 33 ஆனால் இவர் காண்பிக்கும் லதாவினுடைய ஆவணங்களில் அவரது வயது 46 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதியாபரனம் லதா மற்றும் ராகினி தனபாலாசிங்கம் மற்றுமொருவர் மூவருமாக நிதி நிறுவனம் ஒன்றின் நுண்கடன் குழுவொன்றில் அங்கம் வகித்துள்ளனர். இதனூடாகவே லதாவுடன் ராகினிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் லதா, புற்றுநோய்க் காரணமாக கடந்த 17-09-2019 அன்று இறந்த பின்னர், சில நாட்களில் லதாவின் வீட்டுக்குச் சென்ற ராகினி தனக்கும் புற்றுநோய் இருக்கிறது எனத் தெரிவித்து லதாவுக்கு ஏற்பட்ட புற்றுநோய் தனக்கும் ஏற்பட்டுள்ளதா என ஒப்பிட்டு பார்க்க வேண்டும் எனவும் அதற்காக அவரது கிளினிக் கொப்பியை தருமாறும் கோரி பெற்றுச்சென்று, அதனை  பிரதி எடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்தது  குறித்த பிரதியில் தனது பெயரை மாற்றம் செய்து மோசடி நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

எனவே குறித்த பெண்ணின் போலி ஆவணங்களை தங்களது இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பிரசுரிப்பவர்கள் அவதானமாக பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

இவ்வாறான மோசடியில் ஈடுப்படுகின்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் உண்மையில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உதவி செய்ய முடியாத நிலை ஏற்படும்.

மேலும் இவ்வாறான பெண்கள், போலியாக பணம் சேகரிப்பதற்கு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை மூலம் வைத்தியசாலையின் பெயர் பாதிக்கப்படுகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7