காணொளியாக எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பி, அதனூடாக பணம் சம்பாதிக்கும் நடவடிக்கையை சில அரசியல்வாதிகள் மேற்கொள்வதாக அமெரிக்காவின் லொஸ் அஞ்ஜலீஸ் நகர ஸ்ரீலங்கா பௌத்த விகாரையின் விகாராதிபதி வல்பொல பியநந்த தேரர் தெரிவித்துள்ளார்.
வல்பொல பியநந்த தேரர், தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வல்பொல பியநந்த தேரர் மேலும் கூறியுள்ளதாவது, “முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்வது ஒரு வியாபாரம். அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கும், அடிப்படைவாத குழுக்களுக்கும் வேண்டிய பிரகாரமே செயற்படுகின்றனர்.
இலங்கையில் இடம்பெறும் சிறிய ஒரு இனக் கலவரத்தை கூட காணொளியாக எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பினால்,அந்த அரசியல்வாதிகளுக்கு கோடிக் கணக்கில் பணம் கிடைக்கின்றது.
அதேபோன்று, அரசியல் மாற்றமொன்று வரும்போது இலங்கையிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளும், அவர்களது செயலாளர்களும் அரசியல் புகழிடம் வேண்டி ஐரோப்பிய நாடுகளிடம் செல்கின்றனர்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, தமிழ் அரசியல்வாதிகளும் இதனையே செய்கின்றனர். கனடாவின் டொரொன்டோ நகரில் இலங்கை தமிழ் மக்கள் இலட்சக் கணக்கில் உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் புகழிடம் கோரி அந்நாட்டுக்குச் சென்றவர்கள். அரசியல் புகழிடம் கோரி வீசா கோருவதற்கு தேவையான ஆவணங்களை தயாரிக்கும் அனுபமுள்ள சிரேஸ்ட சட்டத்தரணிகள் அவர்களிடம் உள்ளனர்.
பொய்யான தகவல்களை கூறி வீசா கோரும்போது அந்நாட்டிலுள்ள அதிகாரிகள் அனுதாபம் தெரிவித்து வீசா வழங்குகின்றனர்.
அந்நாட்டு அதிகாரிகள் இலங்கை மக்களின் குள்ளநரித்தனம் பற்றி அறிந்தவர்கள் அல்லர். அந்த நாடுகளிலுள்ள தமிழ் மக்கள் எமது நாட்டில் இடம்பெறும் இனவாத கலவர காயொணிகளைக் காட்டி அமெரிக்க கிரீன் கார்ட் கோரிக்கையை விடுகின்றனர்.
இந்த காணொளிகள் ஊடாக ஐரோப்பிய நாடுகளிலுள்ள மக்களின் உள்ளங்களில் எமது நாட்டைப் பற்றி கறுப்பு படமொன்றை வரைந்துள்ளனர்.
இதனால் ஐரோப்பாவிலுள்ள மக்கள் எமது நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் பயப்படுகின்றனர். எமது விகாரைக்கு வரும் அமெரிக்கர்கள் என்னிடம் இதனைக் கூறியுள்ளனர். இது ஒரு ஆபத்தான நிலைமையாகும்” என குறிப்பிட்டுள்ளார்