சட்டமூலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இது வெட்கக்கேடான செயல் என நடிகர் சித்தார்த் விமர்சித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், இது நிலையானது அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மோசமாக, ஆட்சி செய்பவர்களிடம் நாட்டை ஒப்படைத்தால் இவ்வாறான செயற்பாடுகளே நிகழும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தேசிய குடியுரிமை சட்டத்திருத்த சட்டமூலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி அகதிகளாக, இந்தியா வந்துள்ள, இஸ்லாமியர் அல்லாதோருக்கு குடியுரிமை அளிக்க இந்த சட்டமூலத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.