வன்முறையையும் உருவாக்குவதுடன் சொந்த நாட்டு மக்கள் மீதே போர் தொடுக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார்.
ஒரு நல்ல அரசின் பணி என்பது நாட்டில் மக்களிடையே ஒற்றுமையையும், அமைதியையும் உருவாக்குவதும், சிறந்த நிர்வாகத்தை அளித்து, அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதுதான் என்றும் கூறினார்.
ஆனால், பாஜக அரசு தனது சொந்த நாட்டு மக்கள் மீதே போர் தொடுக்கிறது. வன்முறையையும், பிரிவினைவாதத்தையும் உருவாக்குவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இளைஞர்களை நிலையற்ற தன்மைக்கும், வெறுப்பு நிறைந்த படுகுழிக்கும் நாட்டை இந்த அரசு தள்ளுகிறது எனவும் சோனியா காந்தி சாடியுள்ளார்.
மேலும் மத்திய அரசு தனது தோல்விகளை மறைக்கவும், மக்களைத் திசைதிருப்பும் செய்யும் திட்டங்களில் ஒன்றுதான் இந்த தேசிய குடியுரிமை திருத்தச்சட்டம் என சுட்டிக்காட்டிய அவர், இளைஞர்கள் சக்தி திரளும்போது, புதிய வடிவில் அலைபோன்ற மாற்றம் உருவாகும் என கூறினார்.