வன்கொடுமைக்கு உள்ளாக்குவது தொடர்பாக புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டுவரவுள்ளதாக தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரவித்த போதே இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, அதிகரித்து வரும் பாலியல் வன்புணர்வு குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “கணவன்-மனைவிக்குள்ளே பாலியல் வன்முறைகள் நடக்கின்றன. ஆனால், இவை இந்தியாவில் இன்றுவரை குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
பல நாடுகளில் திருமணத்தின் பின்னர் நடக்கும் பாலியல் வன்முறைகள் குற்றமாக கருதப்படுகிறது. குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுகின்றனர். அனால் இந்தியா இதனை ஏன் குற்றமாகக் கருதவில்லை என்பது புரியவில்லை.
நான் இதுகுறித்து தனிநபர் சட்டமூலம் ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறேன். விரைவில் இந்த சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்தார்.