சாமியார் நித்தியானந்தாவின் ஆசிரமம் மூடப்பட்டது.
தனியார் பள்ளி வளாகத்தில் சட்டவிரோதமாக செயற்பட்டு வந்ததாக மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையின் பேரில் இவ்வாறு ஆசிரமம் மூடப்பட்டது.
ஹிராபுர் பகுதியில் செயற்பட்டு வந்த நித்தியானந்தா ஆசிரமம் மீது மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து முறைப்பாடுகள் வந்தன.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் நடத்திய விசாரணையில் தனியார் பள்ளி வளாகத்தில் சட்டவிரோதமாக நித்தியானந்தா ஆசிரமம் செயற்பட்டு வந்தமை தெரியவந்தது.
பள்ளி வளாகத்தில் ஆசிரமம் செயற்பட அனுமதியுள்ளதாக நித்தியானந்தா ஆசிரம நிர்வாகம் அளித்த சான்றிதழும் போலி என தெரியவந்தது. இதனையடுத்து ஆசிரமம் செயற்படுவதற்கான உத்தரவு உடனடியாக இரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து பள்ளி வளாகத்தில் இருந்த ஆசிரமம் உடனடியாக மூடப்பட்டது. அத்தோடு, ஆசிரமத்தில் தங்கி இருந்தவர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மாவட்ட ஆட்சியாளரின் உத்தரவின் பேரில் ஆசிரமம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது.
தனது இரு மகள்களையும் நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து மீட்டுத் தரும்படி ஜெகநாதன் என்பவர் கூறிவந்த நிலையில், குஜராத்தில் இருந்த நித்தியானந்தா ஆசிரமம் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.