தேக்கத்தில் மீனவர் ஒருவர் உயரிழந்துள்ளார்.
மீனவர் பயணித்த வள்ளம் நீரில் மூழ்கியதாலேயே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
கொட்டுக்கச்சிய 10 ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த என்டன் மைக்கல் பெரேரா (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 50 வருடத்திற்கும் மேலாக மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வரும் உயிரிழந்த குறித்த மீனவர், கொட்டுக்கச்சிய நீர்த்தேக்கத்தில் 20 வருடங்களாக மீன்பிடியில் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்வாறு உயிரிழந்த மீனவரின் சடலம் குறித்த நீர்த்தேக்கத்தில் இருந்து பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வெளியே எடுக்கப்பட்டதாகவும் ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணை இடம்பெற்று வருகின்றது.