ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ள பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான கென்சர்வேற்றிவ் கட்சிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குறித்த வாழ்த்தினை மஹிந்த தனது ருவிற்றர் பக்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில், “நான் கொன்சர்வேற்றிவ் கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
பொரிஸ் ஜோன்சனின் தீர்க்கமான தலைமை இந்த வெற்றிக்கு வழிவகுத்தது என்பதில் சந்தேகமில்லை. பிரதமராக இருந்து அவரது மிகச் சிறந்த சேவையை பாராட்டுகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
I congratulate the Conservative party and @BorisJohnson for the resounding victory in the #UKElections2019. His decisive leadership no doubt led to this victory. I wish him the very best for his tenure as Prime Minister.— Mahinda Rajapaksa (@PresRajapaksa) December 13, 2019