ஆனந்தசங்கரி சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றவுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
பழங்குடி மக்களுக்கு எதிராக கனடா செய்த தவறுகளை சுயநிர்ணயத்தின் அடிப்படையில் கொள்கைகளை அங்கீகரித்து செயல்படுத்துவதன் மூலம் மாத்திரமே அதனை சரிசெய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தை முழுமையாக அமல்படுத்த அயராது உழைப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இந்த புதிய பதவியில் அமைச்சர் கரோலின் பென்னட் மற்றும் பழங்குடி மக்களுடன் இணைந்து பணியாற்ற தான் எதிர்பார்ப்பதாகவும் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இலங்கையை பூர்விகமாகக் கொண்ட ஹரி ஆனந்தசங்கரி கனேடிய பிரதமருக்கு மிகவும் நெருக்கமான முறையில் செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது