இராஜதந்திர ரீதியில் பாரிய வெற்றியை நாட்டுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக்கொடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியுள்ளதாவது, “இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு விஜயம் நாட்டுக்கு சிறந்த நலன்களை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் அமைந்துள்ளது.
மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சாதாரண பயணிகள் செல்லும் வழியின் ஊடாகவே தமது பயணத்தை மேற்கொண்டதுடன், மீண்டும் அதே வழியிலேயே திரும்பிவந்தார்.
இதன்போது விமான நிலையத்தின் செயற்பாடுகளை அவதானித்ததுடன், புதிதாக பொருத்தப்பட்டுள்ள ஸ்கேன் இயந்திரத்தையும் பார்வையிட்டார்.
இதன் விளைவாக எதிர்வரும் நாட்களில் விமான பயணிகளுக்கு சிரமங்களின்றி பயணங்களை மேற்கொள்வதற்கான அனைத்து மறுசீரமைப்புகளையும் துரிதமாக அவர் முன்னெடுப்பார்” என குறிப்பிட்டுள்ளார்